இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 97 ஆயிரத்து 105ஆக அதிகரிப்பு!

Tuesday, April 20th, 2021



இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 105ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 93 ஆயிரத்து 374 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 111 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் மாரஸ்சன பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 58 வயதுடைய பெண்ணொருவரும் 84 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related posts: