இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் இன்றும் பலி!

Saturday, November 7th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் மேலும் இரண்டு மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதாக கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கொழும்பு புறக்கோட்டையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் கொழும்பு மாவட்டத்சை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா மரணங்கள் இவ்விரு மரணங்களுடன் சேர்த்து 32ஆக அதிகரித்துள்ளமை இதேவேளை இந்த தொடர்பில் அரசாங்க தகவல் திணைகளம் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

00

Related posts: