இலங்கையில் கொரோனாவினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வு!
Friday, May 1st, 2020இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 504 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மேலும் 187 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும்தெரிவித்துள்ளது.
Related posts:
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசங்கள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் – சுகாதார தரப்ப...
ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் செவ்வாயன்று நிறைவுறுத்...
டிஜிட்டல் பிரிவினை - அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் - உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்...
|
|