இலங்கையில் கால் போத்தல் மதுபானத்திற்கு தடை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, August 30th, 2020

இலங்கையில் கால் போத்தல் மதுபானத்திற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை அமைப்பதற்கு சுற்றாடல் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

எதிர்வரும் வாரம் உரிய மதுபான நிறுவனங்களை அழைத்து கால் போத்தலை மாற்றியமைக்குமாறு ஆலோசனை வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றம் ஏற்படவில்லை என்றால் கால் போத்தல் மதுபான விற்பனையை தடை செய்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் உணவு பொருட்கள் அல்லாத ஷெஷே பக்கட்களை தடை செய்வதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts: