இலங்கையில் கடந்த 3 மாதங்களில் 80 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு – நடமாடும் சேவை ஊடாக பிறப்புச் சான்றிதல்கள் வழங்க நடவடிக்கை!

Monday, July 6th, 2020

இலங்கையில் கடந்த 3 மாதங்களில் 80 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்து 3 மாதங்களும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் அவர்களுக்கான பிறப்புச் சான்றிதல்கள் வழங்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இதற்காக பிறப்புச் சான்றிதல் பதிவு செய்யும் திணைக்களத்தினால் நடமாடும் சேவைகள் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதோடு, இதனூடாக அனைவருக்கும் பிறப்புச் சான்றிதல்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: