இலங்கையில் எல்லை மீறும் கொரோனா தொற்று – நான்கு மாவட்டங்களில் நோய்த்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, April 29th, 2020

உலக நாடுகளில் வேகமாகப் பரவி இலட்சக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் தணிந்திருந்த நிலையில், அண்மைய சில நாட்களாக அதன் தாக்கம் பலமடங்கு வீரியம் அடைந்துள்ளது.

அந்தவகையில், கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இறுதியாக 3 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் அண்மைய நாட்களில் சடுதியாக அதிகரித்த கொரோனாத் தொற்றினால் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளது. இக் கொரோனாத் தொற்றின் அதிகரிப்பினால் மக்கள் மத்தியிலும் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவருகின்ற நிலையில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ன.

இந்நிலையில் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் 140 நோயாளர்கள் சிகிச்சைப் பெறுகின்றனர் எக தெரிவிக்கப்பட்டுளது.

அத்துடன் ஆளணி மற்றும் பௌதீக வளங்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக அனுமதிக்க முடியுமாக இருந்த அத்தனை நோயாளர்களையும் ஐ.டி.எச் வைத்தியசாலை உள்ளீர்ப்பு செய்துள்ளதால் புதிய நோயாளர்களை அனுமதிக்க முடியாத நிலைமை ஏஙற்பட வாய்ப்புள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம கூறியுள்ளார்.

அத்துடன் வீதிச் சோதனை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கவனிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைத்து பொலிஸார் மற்றும் முப்படையினரையும் கணக்கிலெடுத்து அவர்களை கொரோனா தொற்றை கண்டறியும் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது இடங்களில் அவர்கள் மக்களுடன் புழங்கியுள்ளதால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை இதன்மூலம் கண்டறியவும், தொற்று வேறு இடங்களில் இருந்து அவர்களிடம் வந்திருந்தால் அப்படியான பாதுகாப்புத் தரப்பினரை தனிமைப்படுத்துவதும் இதன் நோக்கமென என கூறப்பட்டுள்துடன் இதன் முதற்கட்டமாக இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்களுக்கிடையில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய அனைத்து முகாம்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செயலணியின் பிரதானியும் மேல்மாகாண ஆளுநருமான ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளளார்.

இது இவ்வாறிருக்க கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இதுவரை கோரோனா தொற்றுள்ள எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் உள்பட இலங்கையின் ஏனைய 21 மாவடங்களிலும் கோரோனா தொற்றுள்ளோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம்முதல் இன்றுவரை கோரோனா தொற்றுள்ள 622 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதமான 311 பேர் கடந்த 22ஆம் திகதியிலிருந்து இன்றுவரையான ஒருவாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு கோடிட்டுக்காட்டியுள்ளது

Related posts: