இலங்கையில் எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் – அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அறிவுறுத்து!
Tuesday, June 28th, 2022கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்கான வரைபடத்தை தயாரிக்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சக அதிகாரிகளுக்கு கோபா குழு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் தேவையான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டு இதற்கான விரிவான வரைபடத்தை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயு அகழ்வுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த அமைச்சின் அதிகாரிகள், இந்த அகழ்வு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.
இந்த அகழ்வுப் பணிகளுக்கு வெளிநாட்டு ஆலோசனைகள் தேவையா என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்தும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.
அகழ்வாராய்ச்சிக்கு மற்ற நாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படியானால், அகழாய்வுகளை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நலன் கருதி, இந்த அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வரைபடத்தை விரைவில் தயாரிக்க வேண்டும் என்றும் கோபா குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|