இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டம் – ஓமான் மறுப்பு!

நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்திற்காக முதலீடு செய்வதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்தியை ஓமான் மறுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஓமானின் கனிய எண்ணெய் அமைச்சின் செயலாளர் சலீம் அல் அவுப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒமான் அரசாங்கத்தின் உதவியுடன் 3.85 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஓமானின் கனிய எண்ணெய் அமைச்சு, இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியை மறுத்துள்ளது.
Related posts:
இன்று இலவச கல்வியின் தந்தைக்கு 133 ஆவது ஜனன தினம்!
தடுப்பூசி வழங்கலை சட்டமாக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுற...
விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு...
|
|