இலங்கையில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்!
Tuesday, April 9th, 2019எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களும் பிறப்பு திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.
பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த மத்திய ஆவண பிரிவிலும் மாறகம ஸ்ரீ ஜெயவர்த்தன கோட்டே மற்றும் தெஹிவள வெள்ளவீதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ்களை விநியோகித்தல் மற்றும் காணி உறுதி செய்யும் ஒருநாள் சேவை வெற்றிகரமாக இடம்பெற்றதாக பாணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று!
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் பந்துல குண...
இன்று கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித...
|
|