இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் ஆதரவு தொடரும் – சீன தூதுவர் அறிவிப்பு!

Monday, April 25th, 2022

சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்ஹொங் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 730,000 மெட்ரிக் டன் எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

இதற்காக, மொத்தம் 12 கப்பல்களுக்கான கட்டணமாக, 390 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதில் 7 கப்பல்களுக்கு மாத்திரம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: