இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை – தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!

இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் அனைத்து இலங்கை சலாபி கவுன்சில், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவையும் தடைப்பட்டியலில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த தடைகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகள் நீண்ட காலமாக இந்த அமைப்புகளின் மீது ஒரு பார்வை வைத்திருக்கின்றன, மேலும் அவர்களின் தீவிரவாத போதனைகள் மற்றும் சித்தாந்தங்கள் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!
நாளைமுதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!
புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து அவதானம்!
|
|