இலங்கையில் இந்திய ரூபா பயன்பாட்டுக்கு தீர்மானம் – அரசாங்கம் பரிசீலிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Tuesday, March 7th, 2023இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணயமாக மாற்ற வேண்டியது அவசியமானதென அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியர், இலங்கையில் நேரடியாக தமது பணத்தை பயன்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை எடுத்தால் இலங்கையர் வேறு நாணயத்தை சார்ந்திருக்காமல் செயற்பட முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொகை இம்மாதம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் இலங்கையில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாதெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|