இலங்கையில் இந்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்?

Wednesday, May 29th, 2019

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கை வந்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்த விபரங்களை அறியும் நோக்கில் இந்த குழு இலங்கை வந்துள்ளது.

ஒருவாரகாலம் இலங்கையில் தங்கவுள்ள அந்த குழு அதற்கு தேவையான விபரங்களை சேகரிக்கும் என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளது ஆதரவாளர்கள் சிலர் கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துச்சென்றதாக கூறப்படுகிறது.

அவர்கள் தற்கொலைத் தாக்கதல்தாரிகளுடன் ஏதேனும் தொடர்புகளை பேணியுள்ளனரா? என்ற அடிப்படையில் இந்திய புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


தாம் நினைத்ததே சரியென வாதிடும் மாணவர்கள் மீது பெற்றோரே அக்கறை கொள்ளுங்கள் - உளநல மருத்துவர் சுதாகர...
ஒக்ரோபர் 05 ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியல்!
மூன்று நாடுகளிடமிருந்து மின்வலுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
நாட்டின் பல பகுதிகளில் பெய்ய வாய்ப்பு!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!