இலங்கையில் இதுவரை 41 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது – சுகாதாரப் பிரிவு தெரிவிப்பு!

இலங்கையில் இதுவரை 41 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 19 இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. மேலும், எட்டு இலட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அதன் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 427 பேருக்கு இதன் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒன்பது இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அதன் இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாவற்குழியில் எவ்வித குடியேற்றங்களும் இனி வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது - யாழ். அரச அதிபர் அறிவிப...
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது? - பிரித்தானியா!
புதிய பாதீட்டின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று!
|
|