இலங்கையில் இதுவரை 37 ஆயிரத்து 600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: 343 பேர் குணமடைந்து வெளியேறினர் – சுகாதார அமைச்சு!

Tuesday, May 12th, 2020

இலங்கையில் கொரோனா தொற்று தெர்டர்பில் இதுவரையில் 37600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றையதினம் 1057 பிசி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதிமுதல் இதுவரையில் 37 ஆயிரத்து 662 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள

இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் 869 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 517 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இதுவரை 343 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: