இலங்கையில் இணையத்தள சுதந்திரம் அதிகரிப்பு!

இணையத்தள சுதந்திரம் சம மட்டத்திலும் தடைகள் குறைந்த நாடாகவும் இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக பீரிடம் ஒப் நெட் 2016 சர்வதேச அறிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்தளத்தை பயன்படுத்துவோருக்கு வரையறைகள் குறைந்த நாடாகவும் இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30 வீதமானவர்கள் இணையத்தளத்தை பயன்படுத்தும் அறிவை கொண்டுள்ளனர்.
இலங்கை சமூக ஊடகங்கள் எந்த தடையுமின்றி செயற்படும் நாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் இணையத்தள சுதந்திரம் அதிகரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இணையத்தள சுதந்திரத்திற்கு தடையேற்படுத்தப்பட்டதாகவும் அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் பீரிடம் ஒப் நெட் 2015 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
நாடு பிளவுப்பட்டுள்ளது - இராஜாங்க அமைச்சர் !
இயற்கை அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயார் - இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்!
நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தாயார் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...
|
|