இலங்கையில் அறிமுகமாகிறது இலத்திரனியல் கடவுச்சீட்டு!

இலங்கை பிரஜைகளுக்காக இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வழங்கப்படவுள்ளது.
இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச-தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் பிரனாந்து ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
|
|