இலங்கையில் அறிமுகமாகவுள்ள மற்றுமொறு இந்திய கார்!

Friday, August 12th, 2016

இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் குறித்த கிளை நிறுவனமானது இதுவரை 100 நாடுகளின் சந்தைகளில் குறித்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், அந்த நிறுவனமானது சுமார் 59 வருடங்களுக்குப் பிறகு தமது வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதல் குறித்த கார் இலங்கையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த காரின் விலை இந்திய ரூபாயின் படி 260,783 தொடக்கம் 364,208 ரூபாய் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: