இலங்கையில் அரசியல் குழப்பம் – தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்து!

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கப்படவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.
அரசியல் சூழ்நிலையால் நாடு குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடைக் கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து என்பனவும் தமது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருத்துவமனையில் தீ விபத்து – மும்பையில் 8 பேர் உயிரிழப்பு!
கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு - 7 பேர் உயிரிழப்பு!
பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி - இதுவரை 2289 பேர் கைது!
|
|