இலங்கையில் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – உலக வங்கி அறிவிப்பு!

Wednesday, September 20th, 2023

அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என தெரிவித்துள்ள உலகவங்கி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும் அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் சென்றால் இலங்கை எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா கூறியுள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் கல்வித்துறை ஊக்குவிப்புக்கும் ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. சபையின் 78 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி உலக வங்கியின் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.

இதேநேரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை உலக வங்கியின் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றும் உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: