இலங்கையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் நோயாளிகள் – பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

இலங்கை அரச மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
191 சிகிச்சை பிரிவுகளில் கோவிட் தொற்றாளர்களுக்காக 29 ஆயிரத்து 530 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 26 ,ஆயிரம் படுக்கைகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 3 ஆயிரத்து 287 படுக்கைகளே எஞ்சியுள்ளன. மேலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் இந்த எண்ணிக்கை குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாளாந்தம் 2 ஆயிரத்து 800 நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு சமாந்திரமாக நோயாளர்கள் கிசிச்சை முடிந்து வெளியேறுவதால் தற்போது மருத்துவமனைகளில் இடத்தட்டுப்பாடு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் 9 ஆயிரம் கட்டில்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|