இலங்கையில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – அரசாங்க தகவல் திணைக்களம்!

நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் நேற்றையதினத்தில் மாத்திரம் 650 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 387 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டவர்களில், 638 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களும் 12 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 720 ஆக உயர்வடைந்துள்ளது.
8 ஆயிரத்து 874 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், நேற்றைய தினம் 701 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 26 ஆயிரத்து 353 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|