இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பு எச்சரிக்கை!

Sunday, February 6th, 2022

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 17 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 இலட்சத்து 80 ஆயிரத்து 770 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 20 பேரும் பெண்கள் 08 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 572ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: