இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

Thursday, November 26th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தொற்று காரணமாக மேலும் இருவர் மரணித்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நவம்பர் மாதம் 23ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதுடன் ஏற்பட்ட அதியுயர் இரத்த அழுத்தமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக த்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பன்னிபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆணொருவர், ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்டப் பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளாபர்.

இவரின் மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானதுடன் கடுமையான கல்லீரல் நோய் நிலைமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: