இலங்கையில் அச்சம் தரும் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று – அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

Sunday, June 6th, 2021

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் தரும் வேகத்தில் காணப்படுவதாக அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் செனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் முதலாவது இரண்டாவது அலைகளில் காணப்பட்டதை விட மூன்றாவது அலையில் முதியவர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கொரோனா வைரசினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 60 வீதமான மரணங்கள் கடந்த ஒன்றரை மாதங்களில் நிகழ்ந்துள்ளன.

இதுவரை கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 58 வீதமானவை இந்த அலையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது மிகவும் ஆபத்தான நிலைமை என தெரிவித்துள்ள அவர் உயிரிழந்தவர்களில் 73 முதல் 75வீதமானவர்கள் 65வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் அர்த்தம் வைரஸ் எங்கள் வீடுகளிற்குள் நுழைந்துள்ளது என்பதே என குறிப்பிட்டுள்ள அவர் முதலாவது இரண்டாவது அலைகளில் வீடுகளில் உயிரிழப்புகள் இவ்வளவு தூரம் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 90 வீதமான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவே போக்குவரத்து தடைகள் நடைமுறைக்கு வந்தன ஆனால் அவற்றால் 60 வீதம் மாத்திரம் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் தெரிவித்துளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: