இலங்கையிலுள்ள 25 இலட்சம் பேர் வீடுகள் இன்றி சிரமங்களுக்கு முகங்கொடுதுள்ளனர் – அமைச்சர் சஜித்!

Wednesday, October 4th, 2017

உலக குடியிருப்பு தினம் கொண்டாடப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள 25 இலட்சம் பேர் வீடுகள் இன்றி சிரமங்களுக்கு முகங்கொடுதுள்ளனர் என வீடமைப்பு மற்றம் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதன்பின்னர் இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 466 உதாகம்மான கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் 500 வரை அதிகரிக்கப்படவுள்ளது. வீடொன்றை பெற்றுக்கொள்வது மனித உரிமையாகும். நல்லாட்சி அரசாங்கம் இரண்டாயிரத்து 600 உதாகம்ம கிராமங்களை ஸ்தாபிக்கவுள்ளதாகவும்  வீடமைப்பு மற்றம் நிர்மாணத்துறை  அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.

Related posts: