இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

Wednesday, August 25th, 2021

நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை  கடந்துள்ளது.

நேற்றுவரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து  801 ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளில், தாமதமான முடிவுகளில் மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்றுறுதியானதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து, 285 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொவிட் தொற்று பரவலின் ஆரம்பத்திலிருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட உலகின் 60 ஆவது நாடாக இலங்கை மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: