இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு தொற்றாளர்களும் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன நாட்டில் நேற்றையதினம் 491 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 487 பேருக்கும் இத்தாலியில் இருந்து வந்த 3 பேருக்கும், துர்க்கியில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 771 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம் நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றில் இருந்து 319 பேர் குணமடைந்தனர். இதன்படி, நட்டில் கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 6 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|