இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் யாழ்ப்பாணத்தில் கைது!

Sunday, July 12th, 2020

தமிழக அகதி முகாமில் இருந்து தப்பி வந்த நால்வரை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்களில் அகதிகள் இருவரும், படகை ஓட்டி வந்தவர்கள் இருவமாக நால்வர் இருந்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகை அவதானித்த கடற்படையினர் அதனை வழிமறித்துள்ளனர்.

அப்போது படகில் நால்வர் இருந்துள்ளனர். அந்த நால்வரையும் சோதனைக்கு உட்படுத்திய சமயமே இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தங்கியிருந்த இருவர் படகில் இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்த இருவரும் அவர்களை அழைத்து வந்த உள்ளூர் மீனவர்கள் இருவருமாக நால்வரையும் கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட நால்வரையும் கொரோனா அச்சம் காரணமாக அண்மித்து விசாரணை செய்வதோ அல்லது பதிவுகளை மேற்கொள்வதோ நெருக்கடியாக இருப்பதகக் கூறப்படுகிறது.

அந்த நால்வரையும் பொலிஸாரிடம் ஒப்படைப்பதிலும் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது எனவும் கூறப்பட்டது.

Related posts: