இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, January 30th, 2021

இலங்கையில் 73 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து நிறுவனங்களிலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள குறித்த அமைச்சு, பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை குறித்த அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

செழிப்பான எதிர்காலம் வளமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் சுத்தந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்அரச அலுவலகங்கள் அமைந்துள்ள வளாகங்களில் மின்விளக்குகளை ஒளிர விடுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: