இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம்:  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

Sunday, January 29th, 2017

 

இலங்கையின் 69வது சுதந்திர தின வைபவத்தை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்

சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் வைபவத்திற்கு அமைவாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் சுதந்திர தின வைபவம் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார் .

48ca3abb14cb75e4e30bf24e1373afd8_XL

Related posts: