இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர!

Tuesday, April 19th, 2016

இலங்கையின் 34 ஆவது புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபராக பதவியாற்றி எம்.கே. இலங்கக்கோன் ஒய்வு பெற்றதை தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கான வெற்றிடம் நிலவியது. இந்நிலையிலேயே புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர்  அரசியலமைப்புச் சபைக்கு இன்று அழைக்கப்பட்டனர்.

பிரதி பொலிஸ் மாஅதிபர்களான ஜீ.டீ.விக்கிரமரத்ன பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம்.விக்கிரமசிங்க ஆகிய பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கே அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜெயசுந்தரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: