இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதி இன்று நியமனம்?

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதி இன்று நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன.
22வது இராணுவத்தின் தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, நேற்றுடன் தன ஓய்வுபெற்றார். இந்நிலையில் அவருக்கு சேவைநீடிப்பு வங்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டபோதும், சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை.
இதையடுத்து, புதிய இராணுவத்தளபதி இன்று நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அண்மையில், பாதுகாப்பு செயலர் இராணுவத்திடம் அதிகாரிகளின் தற்போதைய சேவை மூப்பு விபரத்தை கோரியிருந்தது.
அதன்படி, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியானகே மற்றும் மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன ஆகியோரது பெயர்கள் பாதுகாப்பு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவர் புதிய தளபதியாக நியமிக்கப்படுவார்என்றும், எனினும் அவர்களில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|