இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா – 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் நடவடிக்கை!
Saturday, May 14th, 2022இலங்கைக்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கையில் நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்திற்குத் தேவையான யூரியாவை பெற்றுக்கொள்வது தொடர்பாக, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தற்போதுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்தில் நெல்லுக்கான மொத்தத் தேவையான 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும் பணப்பற்றாக்குறையில் உள்ள இலங்கை அரசாங்கம் உர ஏற்றுமதிக்கான பணத்தை எவ்வாறு செலுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நேபாளத்திற்கு அடுத்தபடியாக உரம் வழங்குவதற்கான இந்தியாவின் உத்தரவாதத்தைப் பெற்ற இரண்டாவது நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|