இலங்கையின் வளர்ச்சியில் இந்தியா நண்பனாக அருகில் இருக்கும் – பிரதமர் மோடி!

Saturday, May 13th, 2017

இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும் புத்த பகவானின் போதனைகள் 21ம் நூற்றாண்டிலும் செல்லுபடியாகும் என்றும் அதன் பெறுமதியை எதிர்காலத்திலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14 வது சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையில் இந்திய விமான நிறுவனத்தின் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு “என்னுடைய தமிழ் சகோதரர்கள்´ பயணிப்பதற்கு இலகுவாக இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாகம், தான் இதனைக் கூறுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: