இலங்கையின் வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது – இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

சீனா இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை பேண இலங்கையின் வளங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான மே தினக் கூட்டத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். மாத்தறை மாவட்டத்திற்கென 167 பஸ் வண்டிகள் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இருப்பிற்காக தலைமைத்து வத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை எவருக்கும் விமர்சிக்க முடியாதென்று அவர் குறிபிட்டார்.வரலாற்றில் இவ்வாறான முன்மாதிரியே காணப்பட்டதாகவம் தெரிவித்த அவர் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|