இலங்கையின் வடிவம் மாற்றமடையும்  – நில அளவை திணைக்களம்!

Friday, April 13th, 2018

நில அளவை திணைக்களத்தினால் புதிதாக வடிவமைத்துள்ள புதிய வரைப்படத்திற்கமைய இலங்கையின் வடிவம் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வரையப்படத்திற்கமைய தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் சில அதிகரிப்புகளும், சிலாபம் கடற்கரையில் சிறிய குறைவுகளும் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு துறைமுக நகரம் காரணமாக இலங்கையின் பூமி அளவில் 2.7 சதுர கிலோ மீற்றர் எனப்படும் 270 ஹெக்டேயார் புதிதாக இணைப்படும் என இலங்கை நில அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நில அளவுகளை அதிகரித்து கொள்வதற்காக கடலில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

துறைமுக நகரம் மற்றம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் காரணமாக இலங்கை வரைப்படத்தில் மாற்றம் ஏற்பட்டு புதிய வடிவம் ஒன்றை கொடுக்கும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: