இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூ வழங்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டு!

2 ஆவது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வழங்குவதற்கு இது போதுமானது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19 ஆயிரத்து 413 பேரில், இதுவரை 50 வீதமானோருக்கு கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் குறைந்த விலையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்கள்!
பயணத்தை தடுக்க முனைந்தார்கள் - ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு!
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் விடுதலை!
|
|