இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம்!

Saturday, April 28th, 2018

சர்வதேச பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தற்போது வெளியான பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் கடந்த ஆண்டைவிட 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு இலங்கை 131ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சென்றகாலங்களில் ஊடக அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை தொடர்வது தடுக்கப்பட வேண்டும் என்றுஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Related posts: