இலங்கையின் முதல் பெண் நீதி அமைச்சர்!

Saturday, August 26th, 2017

 

புதிய நீதித்துறை அமைச்சராக தலத்தா அத்துகோரள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டார்.

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நீதித்துறை அமைச்சு பொறுப்பு ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ட்ரின் பெர்னாண்டோ உட்பட பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்

Related posts: