இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, July 11th, 2018

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துடன் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சிங்கப்பூர் பிரதமர் லீன் சின் லூ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினர் சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டுத் தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இந்த ஒப்பந்தம் மூலம் ஏற்படுவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிட்டார்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக புதிய தொழிநுட்பம், அறிவு மற்றும் தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் இலங்கையருக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

பொருளாதார, நிர்வாக மற்றும் சமூகத் துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமாக செயற்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் அனுகூலமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: