இலங்கையின் முதலாவது விளையாட்டு குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சூலாநந்த பெரேரா நியமனம்!

Friday, May 17th, 2024

நாட்டின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் எனப்படும் குறைகேள் அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் டபிள்யூ ஏ சூலாநந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம் அல்லது சம்மேளனத்தின் முடிவு அல்லது நடவடிக்கையால் பாதிக்கப்படும் எந்தவொரு நபர் தொடர்பிலும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவது அவரது கடமையாகும்.

முறைப்பாடுகளை 14 நாட்களுக்குள் முன்வைக்க வேண்டும் என்பதுடன், விளையாட்டு குறைகேள் அதிகாரி அது தொடர்பான பரிந்துரைகளை விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: