இலங்கையின் முதலாவது கொரோனா கண்காணிப்பு நிலையம் – சுகாதார அமைச்சு!

Thursday, March 5th, 2020

ஹெந்தலை தொழு நோய் மருத்துவமனையை இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் கண்காணிப்பு நிலையமாக மாற்ற சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தேசிய செயற்பாட்டு பாதுகாப்புக் குழு நேற்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் சுகாதார அமைச்சில் கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஈரான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே ஹெந்தலை தொழு நோய் மருத்துவமனை முதலாவது கண்காணிப்பு நிலையமாக மாற்றப்பட உள்ளது.

ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இலங்கை வருவோர் அனைவரும் 14 நாட்கள் கண்காணிப்பு உட்படுத்தப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சீனாவின் ஹூஹான் பிரதேசத்தில் இருந்து வந்த மாணவர்கள் தியத்தலாவ இராணுவ வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

நோய் தொற்றுக்கு உள்ளவர்கள் இந்த கண்காணிப்பு உட்படுத்தப்பட மாட்டார்கள். நோய் தொற்றுக்கு உள்ளாகாதவர்களே இந்த கண்காணிப்பு உட்படுத்தப்பட உள்ளனர்.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்காணிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: