இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவ இந்தியா உறுதியுடன் உள்ளது – இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவிப்பு!

Monday, May 25th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ஒருநாளில் இந்தக்கருத்தை வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளின் தலைவர்களும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களில் எப்போதும் ஒருவரொருக்கொருவர் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியா இலத்திரனியல் வர்த்தக வசதிகளுடன் வர்த்தக அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் பொறிமுறை ஒன்றுக்கு தயாராகிவருகிறது என்றும் கோபால் பக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா நீண்டகால அடிப்படையில் போக்குவரத்து, வர்த்தக பொருளாதார விடயங்களில் நெருங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: