இலங்கையின் பொருளாதாரம் 5.3 வீதத்தால் அதிகரிக்கும் – உலக வங்கி

Monday, April 18th, 2016

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2016ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும் 5.3 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் முதலீடு மற்றும் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் பிற்போடப்பட்டவை காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னர் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நாணய வைப்பு காரணமாக சர்வதேசம் எதிர்நோக்கிய சவால்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிப்படைந்தது. அதனால் உயர்தன்மையிலான கடன் குறைந்த அளவிலான அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அதிக பணவீக்கம் என்பனவற்றை இலங்கை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேவேளை இடை நிறுத்தப்பட்டிருந்த துறைமுக நகர திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார துறையின் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts: