இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் – இந்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022

நிதியமைச்சர் அலி சப்ரி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நிதியமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக வைத்து இந்தியாவின் அர்பணிப்பை அவர் இதன்போது உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: