இலங்கையின் பெற்றோலியத்துறையில் நீண்ட காலத்துக்கு உதவ தயாராகும் இந்தியா!

Friday, March 11th, 2022

இலங்கையின் பெற்றோலிய நெருக்கடி நிலையை வெற்றிகொள்ள தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நேற்று இந்திய பெற்றோலியத்துறை அமைச்சர் ஹர்டீப் சிங் பூரியை சந்தித்தபோது இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது

இதன்போது, இந்தியா நடப்பு எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழங்கிய 500 மில்லியன் டொலர்கள் உதவிக்கு மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடி தொடர்பிலும் மொரகொட விளக்கமளித்தார். இதனையடுத்து இரண்டு தரப்பினரும் பிரச்சினையை வெற்றிகொள்ள செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.

அதேநேரம் பெற்றோலியம், எரிபொருள், எரிவாயு மற்றும் மூலோபாய திட்டங்களின் நீண்டகால திட்டங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

இந்திய அமைச்சர் ஹர்டீப் சிங் ஏற்கனவே இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராக செயற்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: