இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் – தினேஷ் பிரியந்தவிற்கான வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறும் பரா ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றில் முதன் முறையாக இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வெற்றியீட்டித் தந்த இராணுவ வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – தாய் நாட்டை கொடூரமான பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கும் இம்முறை சர்வதேச விளையாட்டு வரலாற்றின் பொன்னெழுத்துக்களில் இலங்கையின் பெயரை எழுதுவதற்கும் நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை
பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது நாடு பெருமை கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|