இலங்கையின் புதிய வரைபடம்:  ஜூன் மாதமளவில் பொதுமக்கள் கொள்வனவுக்கு!

Friday, June 1st, 2018

அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் இலங்கையின் நிலப்பரப்பு 2Km இனால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் பி.எம்.பி.உதயகாந்த தெரிவித்தார்.

இதேபோன்று மொரகஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள் பல இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஜுன் மாதம் நடுப்பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும். இதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும்.

Related posts: