இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – பிரதமர் தினேஸ் குணவர்தன இடையே சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடல்!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய முதலீட்டு திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு பிரித்தானியா உயர்ஸ்தானிகருக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி, நிதிச் சேவைகள், மருந்துகள் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளிலான முதலீட்டை இலங்கை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எம்.ஆர். லதீப்பிற்கு நியமனம் வழங்காமை குறித்து பொலிஸ் மா அதிபர் - பொலிஸ் ஆணைக்குழு இடையில் முரண்பா...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்...
அரபு மொழியிலுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்றுநிருபம் வெளியீடு!
|
|